CINEMA
“என்னைய தப்பா நினைச்சிட்டீங்க”… சீறி பாய்ந்த நயன்தாரா ரசிகர்களை சமாதானப்படுத்திய கரண் ஜோகர்
அந்த சம்பவத்திற்காக தன் மேல் சீறி பாய்ந்த நயன்தாரா ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தை கூறியுள்ளார் கரண் ஜோகர். என்ன தெரியுமா?
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று “காஃபி வித் கரண்”. இந்த நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோகர் பல சினிமா பிரபலங்களை அழைத்து பேட்டி எடுப்பார்.
அப்பேட்டியில் சில சர்ச்சையான கேள்விகளும் கேட்கப்படும். சில நேரம் சர்ச்சையான பதில்களுமே வரும். இந்நிலையில் சமீபத்தில் சமந்தாவும் அக்சய் குமாரும் “காஃபி வித் கரண்” சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
அதில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நயன்தாராவுடன் தான் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் சமந்தா. அப்போது “நான் சமீபத்தில் நயன்தாராவுடன் நடித்தேன். தென் இந்தியாவின் மிகப்பெரிய நடிகை அவர்” என கூறி வந்தபோது அதனை இடைமறித்த கரண் ஜோகர் “ஆனால் என்னுடைய பட்டியலில் அவர் இல்லவே இல்லை” என கூறினார்.
கரண் ஜோகர் இவ்வாறு கூறியது நயன்தாரா ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. பலரும் கரண் ஜோகரை சமூக வலைத்தளங்களில் தாக்கி எழுதி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கரண் ஜோகர் தெளிவுபடுத்தி உள்ளார்.
அதாவது “ஓர்மாக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து எனக்கு கிடைத்த பட்டியலில் சமந்தா தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என குறிப்பிட்டிருந்தது. அதில் நயன்தாரா பெயர் இல்லை. இதை தான் நான் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தேன்” என கூறியுள்ளார். இதனால் நயன்தாரா ரசிகர்களின் கோபம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
