CINEMA
ரஜினியையே ஓவர் டேக் செய்த கமல்.. வேற லெவல் மாஸ்!!
நடிகர் கமல் ஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஓவர் டேக் செய்து சாதனை படைத்துள்ளார்.
எப்போதும் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் நல்ல நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களது திரைப்படங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவும். எப்போதும் ரஜினி திரைப்படங்களுக்கு மாஸ் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் அவரது திரைப்படங்கள் அனைத்தும் உலகலாவிய ஹிட் ஆகும்.
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உண்டு. ஆதலால் அவரது திரைப்படமும் அவ்வாறே மாபெரும் வெற்றி பெறும்.
எனினும் தற்போது அதிர்ச்சி தரும் விஷயமாக கமல் ஹாசனும் அந்த இடத்தை பிடித்து விட்டார். கமல் ஹாசனிற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் வணிக ரீதியாக கமல் ஹாசன் கேரியரில் பல தோல்வி படங்கள் இருந்திருக்கின்றன.
கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் அவருக்கு “தசாவதாரம்” “பாபநாசம்” ஆகிய திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆகின. அதனிடையே அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் எதுவும் கைக்கொடுக்கவில்லை.
மேலும் “மர்ம யோகி”, “சபாஷ் நாயுடு”, “மருத நாயகம்” “தலைவன் இருக்கிறான்” என பல திரைப்படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் எல்லா முயற்சியும் பாதியிலேயே நின்று போனது. இதனால் கமல் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் தான் கடந்த 3 ஆம் தேதி “விக்ரம்” திரைப்படம் வெளியானது. “விக்ரம்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கமல் ஹாசன் பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று புரோமோஷன் வேலைகளில் தீயாக இறங்கினார். அதற்கு பலன் கிடைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆம்! தற்போது “விக்ரம்” திரைப்படம் உலகம் முழுவது பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. இதன் மூலம் ரஜினிகாந்தின் 2.0 சாதனையை ஓவர் டேக் செய்துள்ளது “விக்ரம்” திரைப்படம்.
