CINEMA
தரை லோக்கலாக இறங்கி குத்தும் கமல்; ரசிகர்களுக்கு செம் ட்ரீட் இருக்கு..
“விக்ரம்” திரைப்படத்தின் “பத்தல பத்தல” பாடலின் புரொமோ வீடியோ வெளிவந்துள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ்-கமல் கூட்டணி மாஸாக கலக்கப்போவது உறுதி என ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி கிடக்கிறார்கள்.
அதே போல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மாஸ் ஹீரோக்களின் கூட்டணி வேறு. படம் வெளியாகும் நாளில் நிச்சயம் திருவிழா தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்தது.
மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை “விக்ரம்” திரைப்படத்தின் “பத்தல பத்தல” சிங்கிள் வெளிவரவுள்ளதாக அனிருத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் “கமல் இறங்கி குத்தப்போறார்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது “பத்தல பத்தல” பாடலின் புரோமோ வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கமல் தர லோக்கலாக ஆடை அணிந்து Terrific-ஆக காட்சி தருகிறார். பின்னால் இசைக்கும் அனிருத்தின் இசை நாடி நரம்புகளை துள்ளாட்டம் போட வைக்கிறது.
இன்று இரவு 7 மணிக்கு “பத்தல பத்தல” சிங்கிள் வெளிவரவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அனிருத் கூறியது போல் கமல் இறங்கி குத்தியிருக்கிறார் என தெரிகிறது. கமல் வெகு காலத்திற்கு பிறகு குத்து பாடல் பாடுகிறார் என தெரியவருகிறது. ஆதலால் ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேற்றி “பத்தல பத்தல” பாடலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
#PathalaPathala #VikramFirstSingle #KamalHaasan #VikramFromJune3
@ikamalhaasan @anirudhofficial @SonyMusicSouth @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @anbariv @iamSandy_Off @RedGiantMovies_ pic.twitter.com/Nc2RbIPb9F
— Raaj Kamal Films International (@RKFI) May 11, 2022