CINEMA
மலையாள பிக் பாஸிற்கு சென்ற கமல்..? அப்போ தமிழுக்கு வரமாட்டாரா?
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பங்கேற்றுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஆகியோரின் நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்திகான புரோமோஷன் வேலைகள் தீயாக நடந்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தை புரோமோட் செய்து வருகிறார். அது மட்டும் அல்லாது சமீபத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பின்னால் இருந்து தோன்றி வியப்படைய வைத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மலையாளத்தில் நடந்து வருகிறது. அந்நிகழ்ச்சியை மோகன் லால் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோஷனிற்காக கமல் ஹாசன் மலையாள பிக் பாஸ் நிக்ழச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
மோகன் லாலுடன் கமல் ஹாசன் சந்திப்பு நிகழ்ந்த தருணத்தை பலர் சிலிர்த்து அப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்தியாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்த தருணம் பலருக்கு Goosebumps-ஐ கிளப்பியுள்ளது.
“விக்ரம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆதலால் இந்தியா முழுவதும் கமல் பயணித்து “விக்ரம்” திரைப்படத்தை புரோமோட் செய்து வருகிறார். இத்திரைப்படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசனே தயாரித்துள்ளார் என்பதால் சூறாவளி சுற்றுப்பயணமாக பல ஊர்களுக்கு சென்று திரைப்படத்தை புரோமோட் செய்து வருகிறார்.
மேலும் வெயிட்டிங்கில் வெறியேத்தி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இது பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரையரங்ககுகள் திருவிழா போல் காட்சி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டிரைலர் பட்டாஸாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமாக பட வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.