CINEMA
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமல்..? சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கமல் ஹாசன் ஒரு முக்கிய பங்களிப்பை செய்துள்ளார். என்ன தெரியுமா?
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை குறித்து ஒரு ஆச்சரியத்தக்க தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் காட்சிகளின் பின்னணியில் கமல் ஹாசன் Voice over-ல் கதை சொல்கிறாராம். வரலாற்று திரைப்படங்களை பொருத்தவரை ஒரு முக்கிய நடிகரை வைத்து கதையின் பின்னணியை Voice Over கொடுக்க வைக்கும் வழக்கம் ஒன்று உண்டு. இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தில் கமல் ஹாசன் தனது குரலால் பங்களித்துள்ளாராம். இச்செய்தி இணையத்தில் பரவி வருகிறது. எனினும் இது குறித்து அதிகார்ப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் நேற்று வெளியானது. டீசர் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. நடிகர்கள் அனைவரும் கச்சிதமாக அவரவர் கதாப்பாத்திரங்களில் பொருந்தியிருக்கின்றனர். முதல் பாகத்தில் சீயான் விக்ரம் தான் முன்னணி கதாநாயகராக இருப்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. டீசரை பார்க்கும் போதும் விக்ரமின் Screen presence –ஏ அதிகமாக உள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
