CINEMA
கமல் குரலில் தமிழர்களின் வீர பெருமைகள்… சும்மா சிலிர்த்துபோச்சு…
கமல் ஹாசன் குரலில் தமிழர்களின் வீரப் பெருமைகளை போற்றும் காணொளி ஒன்று ஒலிம்பியாட் செஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் ஒளிபரப்பப்பட்டது.
செஸ் பிரியர்களிடம் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தான். அதன்படி 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இந்த போட்டியில் கிட்டத்தட்ட 180 நாடுகள் பங்குபெற்றன. அந்நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றனர். இந்தியாவில் இருந்து 30 பேர் பங்குபெற்றனர். அதில் பலரும் பல கேட்டகிரியில் வெற்றி பெற்றனர். இந்த செஸ் போட்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் கமல் ஹாசன் குரலில் தமிழர்களின் வீரப்பெருமைகளை கூறும் ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்டது. அது அந்த அரங்கத்தில் இருந்தபலரையும் சிலிர்க்க வைத்தது. கமல் ஹாசனின் குரல் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதே போல் இதற்கு முன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவிலும் தமிழர்களின் வாணிப அறிவு, தமிழக அரசர்களின் பெருமை, தமிழ் பண்பாடு குறித்து பல காட்சிகள் அடங்கியிருந்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. இந்த காணொளிக்கும் கமல் ஹாசன் தான் குரல் கொடுத்திருந்தார். கமல் ஹாசனின் மொழி உச்சரிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் அனைவரையும் அந்த வீடியோ கவர்ந்திழுத்தது.
அதே போல் ஒலிம்பியாட் செஸ் போட்டியின் நிறைவு விழாவிலும் ஒளிபரப்பப்பட்ட காணொளியில் கமல் குரல் பின்னணியில் ஒலித்தது பல வெளிநாட்டினரை கவர்ந்திழுத்தது.