CINEMA
ஆண்டவரே நீங்களா?…“ரசிகர்களின் பின்னால் நின்று இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்”..
எதிர்பாரா விதமாக ரசிகர்களின் பின்னால் நின்று இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தின் டிரைலர் சென்ற வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் எக்ஸ்பெக்டேஷன் லெவல் எகிறியுள்ளது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அவ்விழாவில் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித், சிம்பு, ராதிகா சரத்குமார் என திரைத் துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் கமல் ஹாசன் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது. அவர் பேசுகையில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். “ஓடிடி என்ற விநியோக தளம் வரும் என அன்றே சொன்னேன்” என அவர் கூறிய போது கரகோஷங்கள் விண்ணை பிளந்தன. மேலும் “ஹிந்தி ஒழிக என்று சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? தமிழ் வாழ்க என்று சொல்வோம்” என கூறியது ரசிகர்களை புல்லரிக்க செய்தது.
“விக்ரம்” திரைப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ரசிகர்கள் ஒவ்வொருவராக கமல் ஹாசன் குறித்து நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கே தெரியாமல் பின்னால் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் கமல் ஹாசன்.
ரசிகர்கள் அதிர்ச்சியில் திக்கு முக்காடி போகின்றனர். ஒருவர் ஆண்டவரே என காலில் விழுகிறார். இவ்வாறு அமைந்துள்ளது அந்த வீடியோ. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
