CINEMA
“ஆண்டவரின் தரிசனம்”… மாஸ் காட்டும் கமல் புகைப்படங்கள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல்ஹாசன் மாஸ் போஸில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகளவில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். அதே போல் இந்தியாவில் இருந்து மாதவன், ஏ. ஆர். ரகுமான், பா. ரஞ்சித், பூஜா ஹெக்டே, தீபிகா படுகோன், நவாசுதின் சித்திக் போன்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து கமல்ஹாசனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார். அனுதினமும் மாஸாக பல புகைப்படங்களை வெளியிட்டு தெறிக்க விடுகிறார். சமீபத்தில் கூட கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஹெலிகாப்டரில் இருந்து கமல்ஹாசன் மாஸாக இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது புது ரக உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்து பல புகைப்படங்களை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் கோட் ஷூட் கண்ணாடியுடன் ஆள் மிரட்டல் லுக்கில் இருக்கிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உருவான “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோக்கள் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிரைலரில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோரின் தோற்றங்களும் படு பயங்கரமாய் இருந்தது.
“விக்ரம்” டிரைலரை பார்க்கும் போது ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கிறதாக ரசிகர்கள் உற்சாகத்தோடு இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திரைப்படத்திற்கு வெறித்தனமாக வெறி ஏற்றிக்கொண்டு வெயிட் செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு “விக்ரம்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் அவர்களை மேலும் வெறியேத்தியது.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பல விதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் கமல்ஹாசன்.