TELEVISION
கமலுடன் போட்டி போட்டு ஆடிய வெங்கடேஷ் பட்; வைரல் வீடியோ
கமல் ஹாசனுக்கு போட்டியாக “குக் வித் கோமாளி” செஃப் வெங்கடேஷ் பட் நடனத்தில் குதித்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக நடுவராக இருக்கிறார் செஃப் வெங்கடேஷ் பட். அவர் இதற்கு முன் பல குக்கிங் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று உள்ளார். ஆனால் அதில் எல்லாம் அவர் மிகவும் Strict ஆக இருப்பார்.
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியிலோ அப்படி இல்லை. தன்னுடைய கலகலப்பான முகத்தையும் காண்பித்து வருகிறார். கோமாளிகளுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் கோமாளிகளின் சேட்டைகளையே மிஞ்சி வருகிறது.
நகைச்சுவையில் கோமாளிகளுக்கே Tough கொடுப்பது, கோமாளிகளை துரத்தி துரத்தி அடிப்பது, கோமாளிகளுடன் நடனம் ஆடுவது என அவரது கலகலப்பான பக்கமும் நமக்கு “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த சீசனில் கோமாளி பரத், வெங்கடேஷ் பட்டை “பட்டு குட்டி” என அழைத்து வந்தது வேற லெவல் டிரெண்ட் ஆனது. வெங்கடேஷ் பட்டின் சமூக வலைத்தளத்திலும் அவரை அவ்வாறு அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு முறை பரத்திடமே சென்று “நீ பட்டு குட்டி ன்னு கூப்பிட ஆரம்பிச்சு, இப்போ என் பொண்ணு கூட என்னைய பட்டு குட்டி ன்னு தான்டா கூப்புடுறா” என கூறினார். அந்தளவிற்கு அவரின் மறுபக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெங்கடேஷ் பட் கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பத்தல பத்தல” பாடலுக்கு கோமாளிகள் பரத் மற்றும் குரேஷியுடன் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் கமலின் Signature Step-ஐ குஷியாக ஆடுகிறார் வெங்கடேஷ் பட்.
View this post on Instagram