CINEMA
“கலகத் தலைவன்” உதயநிதி.. வெளியான புதிய போஸ்டர்
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த புதிய திரைப்படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். சமீபத்தில் கூட “ராதே ஷ்யாம்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்”, “டான்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களை வெளியிட்டார்.
மேலும் “சர்தார்”, “குலு குலு”, “லால் சிங் சத்தா” ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியிட்ட “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களால் பரவலாக வரவேற்கப்பட்டது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினே தயாரித்து வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். “மாமன்னன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த புதிய திரைப்படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் பெயர் “கலகத் தலைவன்”.
“கலகத் தலைவன்” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் “முன் தினம் பார்த்தேனே”, “தடையறத் தாக்க”, “மீகாமன்”, “தடம்” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் ஆர்யா நடித்த “டெடி” திரைப்படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரின் கம்பீரமான குரல் பலரையும் ரசிக்கவைப்பவை.
“இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு இயக்குனர் மகிழ் திருமேனி தான் பின்னணி குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“கலகத் தலைவன்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Presenting #Kalagathalaivan starring @Udhaystalin @AgerwalNidhhi, directed by #MagizhThirumeni 👏⚡️@MShenbagamoort3 #RArjunDurai @teamaimpr pic.twitter.com/tCVZaiCmyS
— Red Giant Movies (@RedGiantMovies_) July 26, 2022
