GALLERY
“பச்சை போர்த்திய காஜல் அகர்வால்”… கண்களை கவரும் ஃபோட்டோஷூட்
நடிகை காஜல் அகர்வால் கண்கவரும் பச்சை உடையுடன் மனதை கவரும் வண்ணம் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்ற நபரை மணம் முடித்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தைக்கு நீல் என்று பெயர் சூட்டினர். எனினும் குழந்தை பிறந்ததில் இருந்து குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் பதிவிடவே இல்லை. அன்னையர் தினமான இன்று சிறிது நேரத்திற்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தையை கட்டிபிடித்தவாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் பச்சை உடையில் கண்களை கவரும் வண்ணம் பல புகைப்படங்களை காஜல் பகிர்ந்துள்ளார். அதில் ஆளை கொக்கி போட்டு இழுக்கும் வண்ணம் காந்த கண்களால் பார்வையாளர்களை கவர்கிறார்.
மேலும் குழந்தை பிறந்த பிறகும் அவரது உடல் அழகு ஒரு சதவீதம் கூட சரியவில்லை. நாம் முன்பு பார்த்த அழகு பதுமை காஜலாகவே இப்போதும் வலம் வருகிறார். சமீப காலமாக அவர் கருவுற்று இருந்த போதும் அவரின் சமூக வலைத்தளங்களில் புதுவிதமாக ஆளை கவுக்கும் வண்ணம் பல புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
மேலும் கருவுற்ற சமயம் அவரின் கணவர் அவரை பாதுகாப்பாக கவனித்துக் கொள்கிறார் என்னும் விதத்தில் கணவருடன் பல ஃபோட்டோஷூட்டுகளை நடத்தினார். அதன் பிறகு குழந்தை பிறந்ததும், குழந்தையின் புகைப்படத்தை பல நாட்கள் பகிரவில்லை. ஆனால் அன்னையர் தினமான இன்று அவரின் மகனின் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிற உடையில் கண்கவர் ஓவியமாக காஜல் அகர்வால் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.