CINEMA
“குழந்தை பிறந்து விட்டதால் இனிமே அப்படித்தான்”.. ரசிகர்களுக்கு காஜல் கொடுத்த அதிர்ச்சி
காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் ஒரு அதிர்ச்சியான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் என்ற நபரை மணம் முடித்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தைக்கு நீல் என்று பெயர் சூட்டினர். எனினும் குழந்தை பிறந்ததில் இருந்து குழந்தையின் புகைப்படத்தை பதிவிடாமல் இருந்தார் காஜல் அகர்வால். அதன் பின் சில நாட்கள் கழித்து குழந்தையுடன் தான் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்தார்.
“காஜலின் குழந்தை செம க்யூட்” என பலரும் கூறி வந்தனர். இதனிடையே காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ளதால் இனி திரைப்படங்களில் நடிப்பாரா மாட்டாரா என ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் காஜல் அகர்வால் சினிமாவில் நடிப்பது குறித்து அதிர்ச்சிகரமான ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது குழந்தை பிறந்துள்ளதால் தற்போது காஜல் அகர்வாலுக்கு திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என தெரிய வந்துள்ளது. இச்செய்தி காஜல் அகர்வால் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமா உலகில் Most Wanted கதாநாயகியாக திகழ்பவர். இவருக்கென்றே மாபெரும் ரசிகர் கூட்டம் உண்டு. கதாநாயகர்களுக்கு சமமாக காஜலை கொண்டாடும் ரசிகர்களும் உண்டு. இவர் நடித்தாலே அத்திரைப்படம் ஹிட் என கூறுவார்கள். அந்தளவுக்கு தென்னிந்திய ரசிகர்களை கைக்குள் வைத்திருப்பவர் காஜல் அகர்வால்.
ஆனால் தற்போது காஜல் அகர்வால் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.