Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

அன்னையர் தினத்தில் காஜல் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்… Surprise!

CINEMA

அன்னையர் தினத்தில் காஜல் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்… Surprise!

அன்னையர் தினமான இன்று காஜல் அகர்வால் முதன் முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்ற நபரை மணம் முடித்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தைக்கு நீல் என்று பெயர் சூட்டினர். எனினும் குழந்தை பிறந்ததில் இருந்து குழந்தையின்  புகைப்படத்தை காஜல் அகர்வால் பதிவிடவே இல்லை. இந்நிலையில் அன்னையர் தினமான இன்று சிறிது நேரத்திற்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தையை கட்டிபிடித்தவாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் “எனது மகனே, நீ எனக்கு விலைமதிப்பற்ற செல்வம் என்பது உனக்கு தெரியவேண்டும் என விருப்பப்படுகிறேன். எப்போதும் எனக்கு நீ விலைமதிப்பற்ற செல்வம் தான். உன்னை என் கையில் தாங்கிய நிமிடத்தில், உன் மூச்சுக்காற்றை உணர்ந்த நிமிடத்தில், உனது அழகான கண்களை கண்ட நிமிடத்தில், நான் என்றும் உன் மேல் தீரா அன்பு செலுத்த போகிறேன் என்பது தெரிந்து விட்டது. நீ எனது முதல் மகன், முதல் குழந்தை, என்னுடைய எல்லா முதலும் நீயே தான்.

வருங்காலங்களில் நான் உனக்கு நிறையவே கற்றுக் கொடுப்பேன், ஆனால் அதற்கு முன்பே நீ எனக்கு எண்ணில் அடங்காதவற்றை கொடுத்துவிட்டாய். நான் ஒரு தாயாக எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்துவிடடாய். மேலும் எனது இதயத்தின் ஒரு பகுதி என் உடலில் இருந்து வெளியே வந்திருப்பது சாத்தியமே என்பதையும் கற்றுக் கொடுத்திவிட்டாய். இது வியப்பாக இருக்கிறது ஆனால் அழகாக இருக்கிறது. நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது” என  நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top