GALLERY
கவர்ச்சி நடிகைகளுக்கே Tough கொடுக்கும் பின்னணி பாடகி; ஹாட் வைரல் புகைப்படங்கள்
கவர்ச்சி நடிகைகளுக்கே Tough கொடுக்கும் வகையில் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி பல ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஜோனிடா காந்தி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பெங்காலி, மராத்தி என பல இந்திய மொழி திரைப்படங்களில் இடம்பெற்ற பல பாடல்களில் பிண்ணனி பாடியுள்ளார்.
குறிப்பாக தமிழில் வெளிவந்த பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். “ஓ காதல் கண்மணி” திரைப்படத்தில் “மென்டல் மனதில்”, “24” திரைப்படத்தில் “மெய் நிகரா”, “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தில் “இது நாள்” ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் “காற்று வெளியிடை” திரைப்படத்தில் “அழகியே”, “வேலைக்காரன்” திரைப்படத்தில் “இறைவா”, “சர்க்கார்” திரைப்படத்தில் “ஓ எம் ஜி பொண்ணு”, “காற்றின் மொழி” திரைப்படத்தில் “றெக்கை துளிர்த்த”, “காப்பான்” திரைப்படத்தில் “ஏ அமிகோ”, “சங்கத் தமிழன்” திரைப்படத்தில் “சண்டக்காரி நீதான்”, “டெட்டி” திரைப்படத்தில் “மறந்தாயே” என்று இவரின் ஹிட் பாடல்களின் பட்டியல் போய் கொண்டே இருக்கும்.
எனினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டாக்டர்” திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணம்மா” பாடல், அதன் பின் “பீஸ்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அரபிக் குத்து” பாடல் ஆகியவை இவரை பரவலாக அறியவைத்தது.
“அரபிக் குத்து” பாடலுக்கு பின் தமிழகத்தில் ஜோனிடாவுக்கு என்றே பல ரசிகர் கூட்டம் உருவாகியது. இவர் சிறந்த பாடகர் மட்டும் அல்லாது சிறந்த மாடலும் கூட. இவர் கவர்ச்சி உடையில் கண்ணை பறிக்கும் வகையில் எடுத்த ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் இளைஞர்களை திக்கு முக்காட செய்பவை.
இந்நிலையில் சமீபத்தில் ஜோனிடா காந்தி கவர்ச்சி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் விதமாக பல ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படங்கள் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.