HOLLYWOOD
ஜானி டெப், ஆம்பேர் ஹெர்ட் வழக்கு; எலான் மஸ்க் டிவீட்..
ஜானி டெப் மற்றும் ஆம்பேர் ஹெர்ட் வழக்கு தொடர்பாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆம்பேர் ஹெர்ட்டின் முன்னாள் காதலர் எலான் மஸ்க் டிவிட் செய்துள்ளார்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப் மற்றும் நடிகை ஆம்பர் ஹெர்ட் ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் ஆம்பேர் எலான் மஸ்க்குடன் சிறிது காலம் உறவில் இருந்ததாக தெரிகிறது.
ஆனாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆம்பேர் ஹெர்ட் , திருமண வாழ்க்கையில் இருந்தபோது ஜானி டெப் உடல் ரீதியாக துன்பப்படுத்தியதாகவும், தன் விருப்பம் இல்லாமல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அக்குற்றச்சாட்டின் படி தனக்கு நஷ்ட ஈடாக பல கோடி ரூபாய் கேட்டிருந்தார் ஆம்பேர்.
ஆனால் ஜானி டெப், ஆம்பேரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது எனவும், இது தன் மதிப்பிற்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது எனவும், ஆதலால் தனக்கு தான் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் ஆம்பேரின் வழக்கிற்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆம்பேர் தரப்பில் இருந்து ஒரு ஆடியோ சான்று ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அதில் ஜானி டெப், ஆம்பேரை தகாத வார்த்தைகளில் திட்டியது பதிவாகி இருந்தது. ஆனால் அதன் பின் ஜானி டெப் தரப்பில் இருந்து ஒரு ஆடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் “நான் வெளிலே போய் நீ என்னை துன்பப்படுத்துன என்று சொன்னால் எல்லாரும் நம்புவார்கள், ஆனால் நீ வெளியே போய் உன்னை நான் துன்பப்படுத்தினேன் என சொன்னால் நம்ப மாட்டார்கள்” என ஆம்பேர் ஜானி டெப்பை மிரட்டியது அந்த ஆடியோ மூலம் தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஜானி டெப், ஆம்பேர் வழக்கை குறித்து ஆம்பேரின் முன்னாள் காதலரும் டெஸ்லா நிறுவனத்தின் CEOவும் ஆன எலான் மஸ்க் எதாவது கருத்து கூறுவாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “அவர்கள் இதில் இருந்து மீண்டு செல்வார்கள் என நம்பிக்கை உள்ளது. இருவருமே உன்னதமானவர்கள்” என குறிப்பிட்டுள்ளார். திருமண பந்தத்தில் இருக்கும்போதே ஆம்பேர் எலான் மஸ்க்குடன் நெருக்கமாக இருந்ததாக ஜானி டெப் ஒரு முறை குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
I hope they both move on. At their best, they are each incredible.
— Elon Musk (@elonmusk) May 28, 2022