Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வழக்கில் ஜெயித்த ஜானி டெப்; விரக்தியில் ஆம்பேர்..

HOLLYWOOD

வழக்கில் ஜெயித்த ஜானி டெப்; விரக்தியில் ஆம்பேர்..

ஜானி டெப்-ஆம்பேர் ஹெர்ட் வழக்கில் தற்போது ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப் மற்றும் நடிகை ஆம்பர் ஹெர்ட் ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் ஆம்பேர் எலான் மஸ்க்குடன் சிறிது காலம் உறவில் இருந்ததாக தெரிகிறது.

ஆனாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆம்பேர் ஹெர்ட் , திருமண வாழ்க்கையில் இருந்தபோது ஜானி டெப் உடல் ரீதியாக துன்பப்படுத்தியதாகவும், தன் விருப்பம் இல்லாமல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் பல பகீர் குற்றச்சாட்டுகளை பிரபல பத்திரிக்கையில் எழுதினார்.. அக்குற்றச்சாட்டின் படி தனக்கு நஷ்ட ஈடாக பல கோடி ரூபாய் கேட்டிருந்தார் ஆம்பேர்.

ஆனால் ஜானி டெப், ஆம்பேரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது எனவும், இது தன் மதிப்பிற்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது எனவும், ஆதலால் தனக்கு தான் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் ஆம்பேரின் வழக்கிற்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.

இவ்வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆம்பேரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என விர்ஜினியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜானியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டு சாட்டியதற்காக ஆம்பேருக்கு 15 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஜானிக்கு 10 மில்லியன் டாலர்களும் நீதிமன்றத்திற்கும் 5 மில்லியன் டாலர்களும் என கூறப்படுகிறது. எனினும் ஜானி டெப்  2 மில்லியன் டாலர்கள் அபராதமாக ஆம்பேருக்கு கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வந்துள்ளது.  இவ்வழக்கில் ஜானி டெப் ஜெயித்துள்ளதால் அவரது மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆனால் ஆம்பேர் விரக்தியில் இருக்கிறார். இத்தீர்ப்பு பெண்களுக்கு அநீதி எனவும் பேசியுள்ளார். மேலும் இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Continue Reading

More in HOLLYWOOD

To Top