Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஜெயம் ரவியின் “அகிலன்” எப்போ ரிலீஸ் தெரியுமா? படக்குழு வெளியிட்ட அசத்தல் வீடியோ

CINEMA

ஜெயம் ரவியின் “அகிலன்” எப்போ ரிலீஸ் தெரியுமா? படக்குழு வெளியிட்ட அசத்தல் வீடியோ

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் “அகிலன்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வீடியோ வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் Family Audience-ன் செல்லப் பிள்ளையாக விளங்கி வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் தான் அமையும்.

வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்களுக்கும் ஜெயம் ரவியை பிடிக்கும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருபவர். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த “கோமாளி” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது.

அதன் பின் வெளியான “பூமி” திரைப்படம் அந்த அளவிற்கு எடுபடவில்லை. மேலும் மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதனிடையே ஜெயம் ரவி “அகிலன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

அதில் “அகிலன்” திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட பல காட்சிகளை தொகுத்துள்ளனர். படக்குழு மிகவும் தீவிரமாக பணியாற்றியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் கதை துறைமுகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இத்திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பிரியா பவானி ஷங்கர் இத்திரைப்படத்தில் போலீஸாக வருகிறார்.

இவர்களுடன் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன் ராவ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை என். கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் மாடம் இத்திரைப்படத்தின் டீசர் வெளிவரும் என அறிவிப்பு வந்துள்ளது.

                             

Continue Reading

More in CINEMA

To Top