CINEMA
“என்னிடம் அறிவுரை கேட்டாரா அஜித்?”.. திணறிப்போன ஜெயம் ரவி
அஜித் தன்னிடம் அறிவுரை கேட்டார்? என்ற செய்தியை கேட்டு ஜெயம் ரவி திணறிப்போனார்.
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது “அகிலன்”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஜெயம் ரவியிடம் அங்கிருந்தவர் ஒருவர் “அஜித் உங்களிடம் அறிவுரை கேட்டதாக ஒரு கிசுகிசு இருக்கிறதே” என கேட்டார்.
அதை கேட்டு அரண்டு போன ஜெயம் ரவி “தல அஜித் என்னிடம் அறிவுரை கேட்டாரா? அவர் பெரிய தல, என்னிடம் எதற்கு அறிவுரை கேட்கப்போகிறார்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவுப்படுத்திக் கொள்ள அவசியமே இல்லை. அஜித் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர். அவருக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்” எனவும் கூறினார். அதன் பின் “நான் விஜய் ரசிகர் தான். ஆனால் அஜித்தை மிகவும் மதிக்கிறேன்” எனவும் கூறினார்.
தமிழ் சினிமாவில் Family Audience-ன் செல்லப் பிள்ளையாக விளங்கி வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் தான் அமையும்.
வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்களுக்கும் ஜெயம் ரவியை பிடிக்கும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருபவர்.
தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் வருகிறார். இது சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்ய கரிகாலனின் தம்பி கதாப்பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “அகிலன்” திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
