Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இணையத்தில் லீக் ஆன ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்.. வைரல் புகைப்படம்

CINEMA

இணையத்தில் லீக் ஆன ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்.. வைரல் புகைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் எண்ணூர் பகுதியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் அங்கே ரஜினி குடித்துவிட்டு தெருவில் நடப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கியிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அப்போது அங்கே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ..

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

“பீஸ்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த நிலையில் இதில் திரைக்கதையை சற்று மேம்படுத்த நெல்சனுடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் குறித்த உண்மை தன்மை தெரியவில்லை.

“ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த்-ரம்யா கிருஷ்ணன் காம்போவை பற்றி நாம் கூறத்தேவையே இல்லை. “படையப்பா” திரைப்படத்தில் நீலாம்பரியாக வந்து மிரட்டிவிட்டு போனவர் ரம்யா கிருஷ்ணன். “படையப்பா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார்.

அதே போல் யோகி பாபு தற்போது விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் “தர்பார்” திரைப்படத்தில் யோகி பாபு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top