CINEMA
சீனர்களையே அழுக வைத்த “ஜெய் பீம்” திரைப்படம்.. ரசிகர்கள் உருக்கம்
“ஜெய் பீம்” திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே சீனர்கள் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“ஜெய் பீம்” திரைப்படம் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பெருவாரியான கவனத்தை பெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிறந்த திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருது “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது. மேலும் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து போஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகிக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ். ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டது.
மேலும் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் “ஜெய் பீம்” சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. மேலும் சூர்யாவுக்கு சிறந்த நடிகர் என்ற விருதும் லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகை என்ற விருதும் கிடைத்தது.
அதே போல் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் “ஜெய் பீம்” திரைப்படம் திரையிடபட உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் விதமாக சீன நாட்டில் நடைபெற்ற 12 ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவின் டியான்டன் விருது “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கே “ஜெய் பீம்” திரைப்படமும் திரையிடப்பட்டது. அப்போது ராஜாகண்ணு இடம்பெறும் காட்சிகளில் சீன ரசிகர்கள் கண்கலங்கினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தை குறித்து அவர்களிடம் கேட்டபோது “நீதிக்காக அவர்கள் சந்தித்த இன்னல்களை எங்களாலும் உணரமுடிந்தது, மிகவும் உருக்கமான படம். கண்ணீருடன் பார்த்தோம்” என கூறினார்கள்.
Audience Response for #JaiBhim after the Screening at Beijing International Film Festival@Suriya_offl pic.twitter.com/GUgMqwMJB8
— Sɪᴅᴅнαятн🌬️ (@21ddharth) August 19, 2022
