CINEMA
ஜெய் பீம் பட விவகாரம்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
“ஜெய் பீம்’ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
நடிகர் சூர்யா தனது 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் பெருவாரியான வரவேற்பை பெற்றது. திரைப்படம் சில சர்வதேச விருதுகளையும் வென்றது.
இருளர் சமுதாயத்தின் மீது ஆதிக்க சக்திகள் செலுத்தும் வன்முறையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களால் பாரட்டப்பட்டது மட்டுமல்லாது சில சர்ச்சைகளையும் உண்டு செய்தது. அதாவது திரைப்படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில குறியீடுகள் இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போர் கொடி தூக்கினர். அதன் பின் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலரும் சூர்யாவையும் இயக்குனர் ஞானவேலையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர, உயர் நீதிமன்றம் தற்போது அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா மற்றும் பிறர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என தீர்ப்பு வந்துள்ளது.
“ஜெய் பீம்” திரைப்படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஸா விஜயன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். திரைப்படத்தில் அட்வகேட் சந்துருவாக வந்த சூர்யா சிறப்பாக நடித்திருந்தார். குறிப்பாக திரைப்படத்தில் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டன் தனது அசாதாரண நடிப்பால் பலரையும் வியக்க வைத்தார். செங்கேணியாக வந்த லிஜோமோல் செங்கேணியாகவே வாழ்ந்திருப்பார். இத்திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.