GOSSIPS
காரி துப்பிய “Cyclone” இசையமைப்பாளர்; சோகத்தில் “இருட்டு” டைரக்டர்…
“Cyclone” இசையமைப்பாளர் “இருட்டு” இயக்குனரின் புதிய திரைப்படத்தை பார்த்துவிட்டு “என்ன இப்படி சொதப்பி வச்சிருக்கீங்க” என்று கூறியதால் “இருட்டு” இயக்குனர் சோகத்தில் உள்ளாராம்.
இருட்டிலேயே படம் எடுத்து “இருட்டு” இயக்குனர் என இந்திய அளவில் புகழ் பெற்ற அந்த “இருட்டு” இயக்குனர் தற்போது தமிழின் ஒரு முக்கிய வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் எப்போதோ முடிந்த நிலையில் தற்போது Post production பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் அந்த வரலாற்று சிறப்பு மிக்க வரலாற்று படத்தை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான “cyclone” இசையமைப்பளரிடம் போட்டு காட்டியுள்ளார். படத்தை முழுதாக பார்த்த இசையமைப்பாளர் “இந்த படத்துக்கா இவ்வளவு பில்ட் அப் கொடுத்தீங்க, இதுக்கெல்லாம் எப்படி மியூசிக் போடுறது?” என கேட்டுள்ளாராம்.
இதனை கேட்ட “இருட்டு” டைரக்டர் அதிர்ந்து போயுள்ளார். மேலும் “இவ்வளவு ஜவ்வா இழுக்குற படத்துக்கு எல்லாம் மியூசிக் போடுறதே கஷ்டம், படத்தை மறுபடியும் எடுத்துட்டு வாங்க” என கூறியுள்ளாராம். இதனை கேட்டு செம டென்ஷன் ஆகியுள்ளாராம் “இருட்டு” டைரக்டர்.
இச்செய்தி வரலாற்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவானத்தாரின் காதுகளுக்கு செல்ல “இருட்டு” டைரக்டரை வறுத்து எடுத்துள்ளார்களாம். “படம் ஹிட் ஆகியே ஆகனும், இல்லைன்னா நடக்குறதே வேற” என இருட்டு டைரக்டரை மிரட்டியுள்ளனராம். இதனால் “இருட்டு” டைரக்டர் பெரும் சோகத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் தொட்டும் கை கொடுக்காத அந்த வரலாற்று திரைப்படத்தை “இருட்டு” டைரக்டர் இயக்கவுள்ளார் என்றவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது இவ்வாறு கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுவதால் கோலிவுட் வட்டாரம் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளதாம்.
