Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் “இரவின் நிழல்”.. பார்த்திபன் ஹாப்பி அண்ணாச்சி!

CINEMA

சர்வதேச திரைப்பட விழாவில் “இரவின் நிழல்”.. பார்த்திபன் ஹாப்பி அண்ணாச்சி!

சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் “இரவின் நிழல்” திரையிடப்பட உள்ளதாக பார்த்திபன் மகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கோலிவுட்டின் தனித்துவமான நடிகர். இவரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் சேர்ந்தால் போதும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பார்கள். இவர் நடிகர் மட்டுமல்லாது பல திரைப்படங்களையும்  இயக்கியுள்ளார்.

குறிப்பாக இவர் இயற்றிய “புதிய பாதை” “ஹவுஸ் ஃபுல்” ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை பெற்றது. எப்போதுமே புதுமையாகவும் தனித்துவமாகவும் சிந்திக்ககூடிய இவர் சமீபத்தில் எந்த துணை நடிகரும் அல்லாமல் தான் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு” என்ற திரைப்படமும் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படத்தையும் இவரே இயக்கினார்.

இதனை தொடர்ந்து “இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் “இரவின் நிழல்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்பட உள்ளது. ஆம்! அதாவது உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் “இரவின் நிழல்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மகிழ்ச்சி கலந்த பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில்  என் “இரவின் நிழல் “திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்.” என பகிர்ந்துள்ளார். “இரவின் நிழல்” திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற மே 17 ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கவுள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top