TELEVISION
“அப்பாவா? அம்மாவா?”.. யாரை தேர்தெடுப்பார் இனியா…?
பாக்கியா வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த நிலையில் இனியா யாருடன் இருக்கப்போகிறார்? அப்பாவா? அம்மாவா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா-கோபியின் உறவை பற்றி அறிந்த பாக்கியா கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பத்தினர் பல முறை அழைத்து வீட்டிற்கு வராத பாக்கியா திடீரென வீட்டிற்கு வந்தார்.
பாக்கியா “கோர்ட்டுக்கு போகலாம்” என கோபியை அழைத்த போது குடும்பமே அதிர்ச்சியானது. அதன் பின் கோபியும் பாக்கியாவும் தனது மகன் எழிலுடன் கோர்ட்டுக்கு போயினர்.
பாக்கியாவின் சாமர்த்திய பேச்சால் நீதிபதி விவாகரத்து வழங்கினார். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி கத்தினார். மேலும் “என்றைக்கு இவள் நீதிமன்றப் படி ஏறி டைவர்ஸ் கேட்டு வாங்கினாளோ அன்றிலிருந்து இவளுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை” என கூறினார்.
“இந்த வீட்டில் நீ ஒரு சமையல்காரியாகத்தான் இருந்தாய்” என தேவையில்லாமல் வாய்விட்டார். இதனை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் திகைத்துப் போயினர்.
இதனை தொடர்ந்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். தற்போது வெளிவந்துள்ள புரோமோவில் பாக்கியா பெட்டியை கட்டிவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய இனியா “அப்பா தப்பு செய்ததுனால் என்னை விட்டுவிட்டு போக உனக்கு எப்படி மனது வந்தது?” என கேட்கிறார். அதற்கு பாக்கியா “உன்னை விட்டு போக வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு இல்லை. அப்படி ஒரு நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்” என கூறுகிறார்.
அப்போது கோபி “போதும் உன் டிராமா? இந்த குடும்பத்திற்கும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஆகிப்போயிற்று. வீட்டை விட்டு கிளம்பு” என கத்துகிறார். அதன் பின் பாக்கியா இனியாவை பார்த்து “உனக்கு அப்பா கூட இருக்கனுமா இல்லை அம்மா கூட இருக்கனுமா?” என கேட்கிறார். இனியா என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.