CINEMA
நடு இரவில் வெறித்தனமாக வெளிவந்த இந்தியன் 2 அப்டேட்!!
நடு இரவில் வெறித்தனமாக வெளிவந்துள்ள “இந்தியன் 2” அப்டேட்டை பாருங்கள்.
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.
இதனை தொடர்ந்து சமீப நாட்களுக்கு முன் “இந்தியன் 2” திரைப்படம் குறித்து மீண்டும் பேச்சுக்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் “இந்தியன் 2” திரைப்படம் விரைவில் தொடங்கும் என கூறினார்.
இந்த நிலையில் நேற்று நடு இரவில் ஒரு பெரிய அப்டேட் வெளிவர உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். பலரும் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அப்டேட்டாக தான் இருக்கும் என கூறிவந்தனர்.
𝗛𝗘 𝗜𝗦 𝗕𝗔𝗖𝗞💥
Presenting #Ulaganayagan @ikamalhaasan & @shankarshanmugh’s #INDIAN2 🥁🔥@Udhaystalin @LycaProductions @anirudhofficial #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet @priya_Bshankar #BobbySimha @dop_ravivarman @sreekar_prasad pic.twitter.com/WhcWKaPTvp
— Red Giant Movies (@RedGiantMovies_) August 23, 2022
இந்த நிலையில் அவர்கள் சொல்லி வைத்தார் போல் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அப்டேட் தான் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷி ஆகினர்.
“இந்தியன் 2” திரைப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருக்கிறார்.
பல நாட்களாக எதிர்பார்த்த அறிவிப்பு இப்போது வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.