CINEMA
தொடங்கியது “இந்தியன் 2” திரைப்படம்… மாஸ் அப்டேட்
“இந்தியன் 2” திரைப்படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.
இதனை தொடர்ந்து சமீப நாட்களுக்கு முன் “இந்தியன் 2” திரைப்படம் குறித்து மீண்டும் பேச்சுக்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் “இந்தியன் 2” திரைப்படம் விரைவில் தொடங்கும் என கூறினார்.
இந்த நிலையில் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தின் Pre Production பணிகளை ஷங்கர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கி வந்த “RC 15” திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தியன் 2” திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு மறைந்து போனார். மேலும் “இந்தியன்” திரைப்படத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் மறைந்து போனார். இதனை தொடர்ந்து விவேக் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக நவரச நாயகன் கார்த்திக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் மீண்டும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
