CINEMA
தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு…
“இந்தியன் 2” திரைப்படத்தின் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
“இந்தியன் 2” திரைப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. “இந்தியன் 2” திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, மனோபாலா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. “இந்தியன் 2” திரைப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
“இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்றது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.
இதனை தொடர்ந்து சமீப நாட்களுக்கு முன் “இந்தியன் 2” திரைப்படம் குறித்து மீண்டும் பேச்சுக்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் “இந்தியன் 2” திரைப்படம் விரைவில் தொடங்கும் என கூறினார்.
இந்த நிலையில் நேற்று நடு இரவில் உதயநிதி ஸ்டாலின் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அப்டேட்டை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷி ஆனார்கள். பரவலாக எதிர்பார்ப்புகளை கிளப்பிய இத்திரைப்படம் மீண்டும் தொடங்கவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வந்த விவேக் சென்ற ஆண்டு மறைந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Indian2 🇮🇳 Shoot resumes with a Pooja 🏵️✨ today!@ikamalhaasan @shankarshanmugh @LycaProductions @Udhaystalin @RedGiantMovies_ @anirudhofficial #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet @priya_Bshankar #BobbySimha @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl pic.twitter.com/tjfTv6TdO1
— Lyca Productions (@LycaProductions) August 24, 2022