CINEMA
7 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த இசைஞானி… கடுப்பேற்றிய மழை..
இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்தார். ஏன் தெரியுமா?
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் இளையராஜா. மூன்று தலைமுறையை கடந்தும் இவரது பாடல்கள் நிலைக்க கூடியவை. அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக கலந்திருக்கிறது இவரது இசை. தனது 79 வயதிலும் இவரது இசையில் இளமையான ராகங்கள் அப்படியே உள்ளது.
இசைஞானி இளையராஜா தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த இசையமைப்பாளர். அவரின் பாடல்கள் காலத்துக்கும் அழியாதவை. மூன்று தலைமுறைகளாக ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர்.
மேலும் இளையராஜா ராஜ்ய சபாவின் நியமன எம்பி ஆகவும் நியமிக்கப்பட்டார். தமிகத்தில் தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் என்ற சாதாரண கிராமத்தில் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து இசை உலகில் பல சாதனைகள் புரிந்து தற்போது ராஜ்ய சபா எம் பி ஆகியிருக்கும் இளையராஜா தமிழர்களுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்த்துள்ளார் என ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இளையராஜா ஹங்கேரியில் நடைபெறும் அவரின் இசை நிகழ்ச்சிக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். டூபாய்க்குச் சென்று அங்கிருந்து ஹங்கேரி செல்வதாக இளையராஜா திட்டமிட்டிருந்தார். ஆனால் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்கவும் மேலேறவும் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இளையராஜா பயணிக்க இருந்த விமானம் 2 மணி நேரம் தாமதம் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டதாம். ஆனால் வானிலை மோசமானதின் காரணமாக கிட்ட தட்ட 7 மணி நேரம் தாமதம் ஆகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இளையராஜா மன உலைச்சலுக்கு ஆளானதாக கூறுகின்றனர். எனினும் அதன் பின் இளையராஜா தன் பயணத்தை மேற்கொண்டார்.