CINEMA
விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்வாரா ஹிரித்திக் ரோஷன்..??
“விக்ரம் வேதா” ஹிந்தி திரைப்படத்தின் பட்டையை கிளப்பும் டீசர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார்.
தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “விக்ரம் வேதா”. வித்தியாசமான கதை சொல்லலை கையாண்டு பலரையும் “ஓ” போட வைத்த “விக்ரம் வேதா” திரைப்படம், வெளிவந்த போது வேற லெவல் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தை புஷ்கர்-காயத்ரி இணையர்கள் இயக்கினர். இவர்கள் இதற்கு முன் “ஓரம் போ”, “வ குவாட்டர் கட்டிங்” போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளனர். குறிப்பாக “விக்ரம் வேதா “ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
இதனிடையே “விக்ரம் வேதா” திரைப்படம் பாலிவுட்டிற்கு சென்றது. அங்கே மாதவன் கதாப்பாத்திரத்தில் செயிஃப் அலிகானும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தையும் புஷ்கர்-காயத்ரி இணையர்களே இயக்கி உள்ளனர்.
இந்த நிலையில் “விக்ரம் வேதா” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளிவந்துள்ளது. டீசர் வேற லெவலில் இருக்கிறது. செயிஃப் அலிகானும் ஹிரித்திக் ரோஷனும் டெரராக இருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் டீசர் வெளிவந்த சில நொடிகளிலேயே இணையத்தில் ரசிகர்கள் விஜய் சேதுபதியையும் ஹிரித்திக் ரோஷனையும் ஒப்பிட்டு பேசத்தொடங்கிவிட்டனர். “என்ன இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு ஹிரித்திக் ரோஷனால் ஈடுகொடுக்க முடியாது” என சிலரும் “விஜய் சேதுபதி ரோலில் ஹிரித்திக் ரோஷன் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்” என சிலரும் கூறிவருகிறார்கள்.
எனினும் ஹிரித்திக் ரோஷன் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
