GOSSIPS
“இனிமே அப்பா பேச்சை தான் கேப்பேன்”.. ஹாலிவுட் இயக்குனரின் மகள் எடுத்த முடிவு
இனிமேல் தந்தையின் சொல்லே மந்திரம் என முடிவெடுத்துள்ளாராம் அந்த பிரபல இயக்குனரின் மகள்.
இந்தியாவின் ஹாலிவுட் இயக்குனர் என்று புகழப்படும் அந்த இயக்குனரின் மகள் சமீபத்தில் ஒரு படத்தில் கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் பல வாய்ப்புகளை அவரது தந்தை உருவாக்கிக் கொடுத்தாலும் தந்தையின் பேச்சை கேட்காமால் தானே முடிவெடுத்தாராம்.
இதனால் கடுப்பான இயக்குனர், “என் பேச்சை கேளு, இல்லை என்றால் நீ நடிக்கவே வேண்டாம்” என கூறிவிட்டாராம். இதனால் பெரும் அப்செட்டில் இருந்த மகள், இப்போது சமத்தாக ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
அதாவது இனிமேல் தந்தை கைக்காண்பிக்கும் நடிகர்களுடன் தான் நடிக்கப்போவதாக முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே பல நடிகர்களை பார்த்து வைத்திருந்த இயக்குனர் தன் மகளின் இமேஜ்ஜை கெடுத்துவிடாத படி நல்ல கதாப்பாத்திரம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தாராம்.
அப்போது தான் அந்த ஜனங்களின் மனதை பிடித்த நடிகர் படத்தில் கதாநாயகிக்கான வாய்ப்பு வந்ததாம். நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று நினைத்த இயக்குனர் தனது மகளிடம் இதை தெரிவித்தாராம்.
இனிமேல் தந்தை சொல்லையே கேட்கலாம், அவர் நம் நல்லதுக்கு தான் சொல்வார் என முடிவெடுத்த நடிகை டபுள் ஓகே சொல்லியிருக்கிறார். ஆதலால் தான் அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இதற்கு முன் நடிகை தனக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை தனது தந்தையுடன் ஆலோசிக்காமல் முடிவு எடுத்து வந்தாராம். அதன் பின் ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டாராம் இயக்குனர்.
அதனை தொடர்ந்து தற்போது தந்தை சொல்லே மந்திரம் என முடிவெடுத்து விட்டாராம் நடிகை. இனிமேல் தந்தை எந்த படத்திற்கு கைக்காட்டுகிறாரோ அந்த படத்தில் தான் நடிக்கப்போவதாகவும் முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.