CINEMA
அட்டர் ஃப்ளாப் ஆன சிம்பு படம்.. என்ன இப்படி ஆகிடுச்சு..
சிம்பு, ஹன்சிகா ஆகியோர் நடித்த புதிய திரைப்படம் படு தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வருகிறது.
ஒரு காலத்தில் ஹன்சிகா தென்னிந்திய திரை உலகையே கலக்கிக் கொண்டிருந்தார். 90’s Kidகளின் கனவுக் கன்னியாக தூக்கத்தை கெடுத்த ஹன்சிகா க்யூட் Chubby பெண்ணாக வலம் வந்தார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் திரைப்படங்களாக நடித்து வந்த ஹன்சிகாவிற்கு தற்போது மார்க்கெட் கொஞ்சம் Dull ஆகி உள்ளது. தற்போது சொற்ப திரைப்படங்களிலேயே நடிக்கிறார். எனினும் சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் ஹன்சிகா முன்னணி கதாநாயகியாக நடித்த “மஹா” திரைப்படம் வெளியானது. இது ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமாகும். இதில் ஹன்சிகாவுடன் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகிய பலரும் நடித்திருந்தனர். மேலும் சிம்பு இத்திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜமீல் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹன்சிகாவும் சிம்புவும் பல நாட்கள் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர்கள் பிரிந்த பிறகு இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “மஹா” திரைப்படம் குறித்த ஒரு சோகமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் தற்போது வரை ரூ. 2 கோடிகளுக்கும் மேல் தான் வசூல் ஆகி உள்ளதாம். மேலும் இத்திரைப்படம் படு தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹன்சிகா ரசிகர்களும் சிம்பு ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
ஹன்சிகா தற்போது தமிழில் “பார்ட்னர்”, “ரவுடி பேபி” ஆகிய பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
