Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நட்சத்திர” நடிகையின் திருமண வீடியோ அம்பேல்??

GOSSIPS

“நட்சத்திர” நடிகையின் திருமண வீடியோ அம்பேல்??

“நட்சத்திர” நடிகையின் திருமண வீடியோ ஓடிடியில் வெளிவரும் என்று கூறிய நிலையில் ஒரு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளார்களாம் அந்த நிறுவனம்.

“நட்சத்திர” நடிகரும் “ரவுடி” இயக்குனரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணத்தில் உள்ளூர் சூப்பர் ஸ்டார்கள் முதல் வட நாட்டு சூப்பர் ஸ்டார்கள் வரை கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் முதலில் அந்த மலை மேலே உள்ள கோவிலில் தான் நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பீச் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டது. கோவிலில் தாலி கட்டுவதை நடிகையின் அம்மா மறுத்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமண நிகழ்வு வீடியோ ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் நடிகையின் தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளதாம்.

அதாவது தொகை ரொம்ப அதிகமாக இருக்கிறது என பல நாட்களாக பேரம் பேசி வந்தார்களாம். ஆனால் எதற்கும் மசியாத “நட்சத்திர” நடிகை ஒரே பிடியாய் இருந்தாராம். ஆதலால் “இதனை நாங்கள் பண்ண முடியாது” என கூறி கை விரித்து விட்டனராம்.

இதனால் “நட்சத்திர” நடிகையும் “ரவுடி” இயக்குனரும் கவலையில் மூழ்கி உள்ளனராம். திருமணத்திற்கு முன்பே அவர்களது திருமண நிகழ்வு ஓடிடிக்கு விற்கப்படுகிறது என ஊர் முழுவதும் கூவி வந்த நிலையில் தற்போது ரசிகர்களிடம் வீடியோ எங்கே என கேள்வி எழுமே, அதற்கு பதில் என்ன சொல்ல? என்று சோகத்தில் உள்ளனராம்.

இப்படி அந்த நிறுவனம் கை விட்ட நிலையில் தற்போது என்ன பண்ண? என இருவரும் விளித்துக் கொண்டு வருகின்றனராம். கூடிய விரைவில் எப்படியாவது வீடியோவை எதாவது நிறுவனத்திற்கு விற்று விட வேண்டும் என தற்போது அது குறித்த வேலைகளில் இருவரும் மும்முரமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GOSSIPS

To Top