GOSSIPS
தவளை தன் வாயாலயே கெட்டது; “தூணிலும் துரும்பிலும்” நடிகர் தனக்கே வைத்துக் கொண்ட சூனியத்தை பாருங்க..
தவளை தன் வாயாலேயே கெடும் என்பது போல் “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகர் தனக்கு தானே சூனியத்தை வைத்துக் கொண்டுவிட்டாராம்.
எங்கு திரும்பினாலும் “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் அந்த நடிகர் தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு புரோமோஷன் வாங்கிவிட்டார். ஆதலால் “குமுதா ஹாப்பி அண்ணாச்சி” என்பது போல் மனுஷன் படு பிசியாக இருக்கிறார்.
சமீபத்தில் கூட இவர் வில்லனாக நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைப் போடு போட்டது. வில்லன், ஹீரோ, கேமியோ என பல ரோல்களில் கலக்கி வருகிறார் நடிகர். எந்த ரோல் செய்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் குறிப்பாக அவர் வில்லன் ரோலில் நடித்தால் படம் ஹிட் ஆகி விடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறதாம். ஆதலால் இந்திய அளவில் தயாரிப்பாளர்கள் அவரது வீட்டிற்கு முன் குவிந்து வருகிறார்களாம்.
ஆனால் நடிகரோ இனி வரும் எல்லா ரோலும் வில்லன் ரோலாக மட்டுமே வருமோ என பயத்தில் இருக்கிறாராம். அவர் பயப்படுவது போல் எல்லா மொழிகளை சேர்ந்த தயாரிப்பாளர்களும் வில்லன் ரோலுக்கு இவரை புக் செய்ய லாரியில் வந்து இறங்குகிறார்களாம்.
இதனால் அந்த நடிகர் பெரும் சோகத்தில் உள்ளாராம். சினிமாவின் மேல் மோகம் கொண்டு எந்த கதாப்பாத்திரம் வந்தாலும் நடிக்கலாம் என்று இருந்து விட்டது பெரிய தப்பாகி விட்டது என உணர்கிறாராம். தவளை தன் வாயால் கெடுவது போல் தற்போது தன் செயலாலேயே தனக்கு தானே சூனியம் வைத்துவிட்டதாக எண்ணி வருத்தத்தில் இருக்கிறாராம் அந்த நடிகர் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
