TELEVISION
“குற்றவாளிக் கூண்டில் நிற்கிறேன்”.. கோபி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பாக்கியலட்சுமி கோபி தான் குற்றவாளிக் கூண்டில் நிற்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அட்மிட் ஆன போது ராதிகா அவரை பார்க்க வந்திருந்தார். இதனை பாக்கியலட்சுமி பார்த்து விட்டார். அதனை தொடர்ந்து ராதிகாவும் கோபியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட போது பாக்கியாவிற்கு கோபி இது வரை செய்த பித்தலாட்டங்கள் தெரிய வந்தது.
அதன் பின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த கோபியை பாக்கியலட்சுமி மடக்கினார். கோபிக்கும் ராதிகாவிற்கும் உள்ள தொடர்பை குடும்பத்தினர் முன் போட்டு உடைத்தார்.
தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்ற பெரும் கோபத்தில் இருந்த பாக்கியா அனலாய் கொதித்து எழுந்தார். இந்நிலையில் கோபி இதற்கு முன் செய்த பித்தலாட்டங்களை எல்லாம் புட்டு புட்டு வைத்து விட்டார் பாக்கியா.
மேலும் கோபி பேசிய அனைத்தையும் தான் நம்பியதாகவும், ஆனால் ஏமாற்றி விட்டார் எனவும் அழுதார். இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோபி தலையை தொங்கப் போட்டு நின்றுக் கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து கோபி கேரக்டரில் நடித்த சதீஷ் குமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்
“எல்லாரும் ஏன் தலை குனிந்தே நிற்கிறீர்கள் என கேட்கிறார்கள். என்னால் என்ன பண்ண முடியும்? 90 பக்க காட்சி. 5 எபிசோடுகள். பாக்கியா என்னை வைத்து செய்கிறாள். நான் குற்றவாளி கூண்டில் நிற்கிறேன். என்னால் என்ன சொல்ல முடியும்?” என கூறியுள்ளார்.
#Baakiyalakshmi #Gopi 12.07.2022 pic.twitter.com/EkiDXTCIxR
— Parthiban A (@ParthibanAPN) July 12, 2022
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த தருணம் தற்போது வந்துவிட்டது. இதன் பின் கோபி ராதிகா தான் வேண்டும் என கூறுவாரா? அல்லது பாக்கியாவை சமாதனப்படுத்துவாரா? அப்படியே பாக்கியாவை சமாதானப்படுத்தினாலும் கோபியை பாக்கியா ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
