TELEVISION
போதையில் உண்மையை உளறி கொட்டிய கோபி.. அதிர்ச்சியில் பாக்யா..
பாக்கியலட்சுமி தொடரில் கோபி போதையில் உண்மையை உளறி கொட்டி சிக்கலில் மாட்டிவிட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமியுடன் திருமண உறவில் இருக்கும் கோபி, ஒரு பக்கம் ராதிகாவுடன் தொடர்பிலும் இருக்கிறார்.
ராதிகாவும் பாக்கியலட்சுமியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். இருந்தாலும் கோபி தான் பாக்கியலட்சுமியின் கணவர் என ராதிகாவிற்கு தெரியாது. அதே போல் ராதிகா தன்னுடைய கணவரான கோபியைத் தான் காதலிக்கிறார் என பாக்கியாவிற்கும் தெரியாது.
இருவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடக்கூடாது என கோபி பல முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் கோபி ராதிகாவைத் தான் காதலிக்கிறார். ராதிகாவிற்கு முன்னாள் கணவருடன் பிறந்த ஒரு பிள்ளையும் இருக்கிறது.
கோபி பாக்கியலட்சுமியை கழட்டிவிட்டு எப்படியாவது ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முயற்சித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ராதிகா கோபியின் குடும்பத்தை காண வேண்டும் என கோபியிடம் கேட்க அதற்கு கோபி மழுப்பி கொண்டே வந்தார். அதன் பின் போதையில் ராதிகாவிடம் பாக்கியாவுடன் தான் எடுத்த புகைப்படத்தை காட்டி விட்டார் கோபி. இதனால் ராதிகா அதிர்ச்சியில் மூழ்கினார்.
இதனை தொடர்ந்து இந்த வார புரோமோ வெளிவந்துள்ளது. அதில் கோபி பாக்கியலட்சுமியுடன் வாழும் தன்னுடைய வீட்டிற்கு போதையில் செல்கிறார். அப்போது பாக்கியலட்சுமியும் அவரது மகனும் கோபியை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அப்போது கோபி “எனக்கு உங்க ரெண்டு பேரத் தான் பிடிக்கும். எனக்கு பாக்கியாவை பிடிக்காது” என உளறி கொட்டுகிறார். இதை கேட்ட பாக்கியலட்சுமி அதிர்ந்து போகிறார். இவ்வாறு அந்த புரோமோ அமைந்துள்ளது.
ஏற்கனவே பாக்கியாவின் மகனுக்கு அவனது தந்தையான கோபியின் மேல் ஒரு சந்தேக கண் இருந்தது. அவ்வப்போது அதனை தன்னுடைய அம்மாவான பாக்கியாவிடம் தெரிவித்து வந்தான்.
பாக்கியா அதனை நம்பவில்லை. ஆனால் தற்போது கோபி போதையில் உளறிக் கொட்டியதில் தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார் என தெரிந்து விட்டது. இதனை தொடர்ந்து கோபி என்னென்ன சிக்கலில் மாட்டிகொள்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.