CINEMA
தமிழக கிரிக்கெட் அணியில் கலக்கும் கௌதம் மேனனின் மகன்..
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் தமிழக கிரிக்கெட் அணியில் செமத்தியாக கலக்கி வருகிறார் பாருங்க..
ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம் மேனன் “மின்னலே” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் அவர் இயக்கிய “காக்க காக்க” திரைப்படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.
அதனை தொடர்ந்து “வேட்டையாடு விளையாடு” “வாரணம் ஆயிரம்” “விண்ணைத் தாண்டி வருவாயா” என பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் Trend Setter ஆக உயர்ந்தார். அவரை பின்பற்றி பல இயக்குனர்களும் உதவி இயக்குனர்களும் தமிழ் சினிமா உலகில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஆர்யா, துருவ், ஆதித்யா என மூன்று மகன்கள் உண்டு. இந்நிலையில் அவரது மூத்த மகன் ஆர்யா ஒரு வியக்கத்தக்க சாதனையை செய்துள்ளார். ஆம்!
கடந்த ஜூன் 23 ஆம் தேதி TNPL (Tamil Nadu Premier League) கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்கஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்கஸ், ஐடிரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்நிலையில் நேற்று திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரவுண்டில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்கஸ் அணியும் மோதியது. இதில் நெல்லை ராயல் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்ற 19 வயது இளைஞர் ஒருவர் மூன்று ஓவர்கள் வீசி எதிரணியில் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். அந்த இளைஞர் வேறு யாரும் இல்லை. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹன் மேனன்.
ஆர்யா யோஹன் மேனனுக்கு இப்போட்டி தான் முதல் போட்டி என அறியப்படுகிறது. இந்நிலையில் ஆர்யாவுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
