Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திரை தீ பிடித்த “விக்ரம்” திரைப்படம்… ரசிகர்கள் தெறித்து ஓட்டம்

CINEMA

திரை தீ பிடித்த “விக்ரம்” திரைப்படம்… ரசிகர்கள் தெறித்து ஓட்டம்

“விக்ரம்” திரைப்படம் வெளியான திரையரங்கில் திடீரென திரை தீ பிடித்ததில் ரசிகர்கள் ஓட்டம் எடுத்தனர்.

“விக்ரம்” திரைப்படம் உலகளவில் மெகா ஹிட் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது வரை உலகளவில் ரூ. 170 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் அல்லாது தமிழகத்திலேயே விரைவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள திரையரங்கம் ஒன்றில்  “விக்ரம்” திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென திரை தீப் பிடித்து எரிந்துள்ளது. அதாவது சூர்யா தோன்றும் காட்சியில் திரை தீ பிடித்ததாக கூறப்படுகிறது.  திரை தீ பிடித்த உடன் பார்வையாளர்கள் தலை தெறிக்க திரை அரங்கை விட்டு வெளியே ஓடினர். இதனை தொடர்ந்து திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

“விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் திரைப்பட வரலாற்றிலேயே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களாகவே கமல் ஹாசன் குஷியாக இருக்கிறார்.

“விக்ரம்” வெற்றியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு தன் கைப்பட நெகிழ்ச்சி பொங்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார் கமல். அக்கடிதத்தை லோகேஷ் கனகராஜ் லைஃப் டைம் செட்டில்மண்ட் ஆக எண்ணி அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக அளித்திருந்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை “விக்ரம்” திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.

அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

 Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top