CINEMA
மணி ரத்னத்துடன் கைக்கோர்க்கும் பிரபல விளையாட்டு வீரர்கள்.. வேற லெவல் புரோமோஷன்..
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக பிரபல விளையாட்டு வீரர்கள் தற்போது மணி ரத்னத்துடன் கைக்கோர்த்துள்ளார். என்ன விஷயம் தெரியுமா?
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் சிங்கிள் பாடல் குறித்தான ஒரு புது அப்டேட் நேற்று வெளிவந்தது. அதாவது இன்று மாலை 6 மணிக்கு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” என்ற பாடல் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது.
ஏ ஆர் ரகுமான் இசையில் இப்பாடல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கார்த்தி இடம்பெறப் போகிறார் என தெரிய வருகிறது.
இந்நிலையில் இப்பாடலை ஒவ்வொரு மொழியிலும் பிரபல விளையாட்டு வீரர்கள் வெளியிடுகிறார்கள்.
அதாவது இன்று மாலை 6 மணிக்கு தமிழில் இப்பாடலை பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிடுகிறார்.
தெலுங்கில் இப்பாடலை பிரபல பேட்மின்ட்ன் வீராங்கனை பி வி சிந்து வெளியிடுகிறார்.
மலையாளத்தில் இப்பாடலை பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வெளியிடுகிறார்.
இவ்வாறு பிரபல விளையாட்டு வீரர்களைக் கொண்டு ஒவ்வொரு மொழியிலும் சிங்கிள் பாடலை வெளியிடுவது புரோமோஷனின் உச்சக் கட்ட லெவல் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
சமீபத்தில் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியானது. பேன் இந்திய திரைப்படம் என்பதால் இணையத்தில் சோழர்கள் குறித்த விவாதம் எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிங்கிள் வெளியாக உள்ள செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.