GOSSIPS
உண்மையை உளறி மாட்டிக்கொண்ட பாடகி.. இனி இவர் நிலைமை அவ்வளவு தான்
உண்மையை உளறி கொட்ட வேண்டும் என்ற பெயரில் தான் செய்த செயலால் மாட்டிக்கொண்ட பாடகியின் பரிதாபகரமான நிலையைப் பாருங்க.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இந்த வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. இதனை எதுவும் செய்திட முடியாது என்று சில பேர் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த பிரபல நடிகரின் தற்கொலைக்கு பிறகு இது தற்போது பேச்சுப்பொருளாகி உள்ளது.
மேலும் சமீபத்திய ஒரு சம்பவத்தால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில். அந்த பிரபல பாடகி தனக்கு நடந்த ஒரு இழப்பை கூறவேண்டும் என்று இணையத்தில் கசியவிட்ட பிறகு தற்போது அவர் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளாராம்.
அதாவது அந்த பிரபல வாரிசு மீதே பாய்ந்தது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம். அது மட்டுமல்லாது அந்த படத்தில் இசையமைப்பாளரையும் மாட்டிவிட்டுள்ளார். இதனால் இணையமே கொந்தளித்துபோய் உள்ளது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து கோலிவுட் வட்டாரங்களில் பெரிய விவாதமே எழுந்தது. இதனால் அந்த பாடகிக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த விஷயம் அவருக்கு சிக்கலில் தான் முடிந்துள்ளதாம்.
அதாவது இனி அவர் பாடுவதற்கான வாய்ப்புகள் கம்மி ஆகும் என கூறுகிறார்களாம். என்ன இருந்தாலும் இது ஒரு பெரிய இயக்குனரையும் இசையமைப்பாளரையும் அவமானப்படுத்துவது போல் இருப்பதாகவும், இது போன்ற விஷயங்களை எல்லாம் நாசுக்காக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறி அவரை ஓரங்கட்டப்பார்க்க முடிவு செய்துள்ளதாக சில பேச்சுக்கள் அடிபடுகின்றனவாம்.
இதனால் தற்போது பாடகி பேக் அடித்து இருக்கிறாராம். அதாவது இந்த விஷயத்தை தான் கசியவிடவில்லை எனவும் வேறு யார் மூலமாகவோ இது கசிந்துள்ளது எனவும் கூறிவருகிறாராம். இவ்வாறு கோலிவுட் வட்டாரங்களில் அந்த பாடகி குறித்து கிசுகிசுக்கப்படுகிறது.
