CINEMA
“விக்ரம் வேதா படம் கண்டிப்பா ஊத்திக்கதான் போகுது”.. நடிகருக்கே சவால் விட்ட பிரபல விமர்சகர்
“விக்ரம் வேதா” திரைப்படம் கண்டிப்பாக Flop தான் என நடிகருக்கே சவால் விட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் அந்த பிரபல விமர்சகர்
தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “விக்ரம் வேதா”. வித்தியாசமான கதை சொல்லலை கையாண்டு பலரையும் “ஓ” போட வைத்த “விக்ரம் வேதா” திரைப்படம், வெளிவந்த போது வேற லெவல் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தை புஷ்கர்-காயத்ரி இணையர்கள் இயக்கினர். இவர்கள் இதற்கு முன் “ஓரம் போ”, “வ குவாட்டர் கட்டிங்” போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து “”விக்ரம் வேதா” திரைப்படம் பாலிவுட்டிற்கு சென்றது. அங்கே மாதவன் கதாப்பாத்திரத்தில் செயிஃப் அலிகானும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தையும் புஷ்கர்-காயத்ரி இணையர்களே இயக்கி உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது.
இந்நிலையில் ‘விக்ரம் வேதா” பாலிவுட் ரீமேக் திரைப்படம் குறித்து பிரபல விமர்சகர் கமால் ஆர் கான் ஒரு சர்ச்சையான கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது “ஹிரித்திக் ரோஷன் அவருக்கு வந்த பல நல்ல கமெர்சியல் படங்களை நிராகரித்து விட்டு விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நிச்சயமாக தோல்வியை தழுவப்போகிறது. நான் ஹிரித்திக் ரோஷனுக்கு சவால் விடுகிறேன்” என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மேலும் “ஓரு வேளை விக்ரம் வேதா திரைப்படம் ஹிட் ஆகி விட்டால் நான் திரைப்படங்களை விமர்சனம் செய்வதை நிறுத்தி விடுகிறேன். ஒரு வேளை இத்திரைப்படம் ஊத்திக் கொண்டால் ஹிரித்திக் ரோஷனுக்கு நல்ல Script-ஐ தேர்ந்தெடுக்க தெரியாது என அனைவரின் முன்னும் அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்” எனவும் கூறியுள்ளார். இதனால் ஹிரித்திக் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமா ரசிகர்களும் அவரை டிவிட்டரில் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.
Actor @iHrithik rejected a very best commercial film and agreed to do #VikramVedha which will be a sure shot disaster. So how anybody else can be responsible for the result. I will give all these details in my reviews once film is near to release. But it’s my challenge to Hrithik
— KRK (@kamaalrkhan) July 2, 2022