CINEMA
“மாமன்னன்” ஃபகத் ஃபாசில் கெட் அப்; வேற லெவல் பாருங்களேன்..
“மாமன்னன்” திரைப்படத்தின் ஃபகத் ஃபாசிலின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.
“பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, ஆகிய வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வருகிற திரைப்படம் “மாமன்னன்”. இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தின் ஃபகத் ஃபாசில் கெட் அப் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஃபகத் ஃபாசில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் ஆள் பார்ப்பதற்கு கிராமத்து லுக்கில் இருக்கிறார்.
மேலும் அப்புகைப்படத்தில் மாரி செல்வராஜ், மிஷ்கின் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ஹாயாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது.
இப்புகைப்படங்களை எழுத்தாளர் பவா செல்லதுரை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் அவரும் இடம்பெருகிறார். மேலும் அந்த பதிவில் “சேலத்தில் மிஷ்கின், மாரி செல்வராஜ், ஃபகத் ஃபாசில் என நீண்ட உரையாடல்” என குறிப்பிட்டிருக்கிறார்.
ஃபகத் ஃபாசிலின் கைகளில் சில புத்தகங்கள் இருக்கிறது. அது எழுத்தாளர் பவா செல்லதுரை புத்தகங்களாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது. பவா செல்லதுரை புத்தகங்கள் மலையாளத்திலும் வெளிவந்துள்ளன. மேலும் பவா செல்லதுரை நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பு வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தின் கெட் அப் வெளியாகி வைரலாகி வருகிறது.