TELEVISION
இனி இந்த சீரியல் சனிக்கிழமையும் பார்க்கலாம்.. ??
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி தொடர் தற்போது சனிக்கிழமையும் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த தொடராக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது “ஈரமான ரோஜாவே” சீசன் 2. இதில் பிக் பாஸ் கேப்ரியல் காவ்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
காவ்யா ஜீவாவை காதலித்து வர இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பார்கள். அதே நேரம் காவ்யாவின் அக்கா பிரியாவிற்கு ஜீவாவின் அண்ணன் பார்த்திபனை மணம் முடிக்க வேண்டும் என முடிவு செய்வார்கள். ஆனால் திருமணம் நடைபெறும் போது பிரியாவை கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.
எப்படியாவது இந்த திருமணம் நடைபெற வேண்டும் என காவ்யாவை பார்த்திபனுக்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள். அதே போல் திரும்பி வந்த பிரியாவை ஜீவாவிற்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள்.
இவ்வாறு இவர்களின் வாழ்க்கை போய் கொண்டு இருக்கையில் காவ்யாவிற்கும் பார்த்திக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பார்த்திபன் காவ்யாவை நல்லபடியாக அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொண்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன் பார்த்தியின் அம்மா, ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கே அவரின் தோழி ஒருவரை பார்த்தார். அவர் பார்த்தியின் அம்மாவிடம் காவ்யாவை ஒரு பையனுடன் அடிக்கடி பார்த்திருக்கிறேன் என கூறினார். அதை கேட்டு ஷாக் ஆன பார்த்தியின் அம்மா வீட்டிற்கு வந்து காவ்யாவிடம் ”நீ திருமணத்திற்கு முன் வேறு யாரையாவது காதலித்தயா?” என கேட்டார்.
அதற்கு ஷாக் ஆன காவ்யா “ஆமாம்” என அழுது கொண்டே கூற அதற்கு பார்த்தியின் அம்மா” நான் தான் தவறு செய்து விட்டேன். உனக்கு பிடிக்காமல் என் பையனை உனக்கு திருமணம் செய்து விட்டேன். அவனை விட்டு இனிமேல் பிரிவதற்கு முயற்சி செய். அவனை வெறுப்பது போல் காட்டிக்கொள்” என கூறினார். தற்போது காவ்யா பார்த்தியை வெறுத்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடர் தற்போது சனிக்கிழமையும் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.