CINEMA
“பேசாம நம்ம அரசியலுக்கு போயிடுவோமா”? கலக்கலான “DON” டிரைலர்…
டான் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டான்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், உதயநிதி ஸ்டாலின்,எஸ். ஜே. சூர்யா ஆகியோரும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, ஷிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். “டான்” டீசரில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் பள்ளி மாணவராகவும் இளமையாக காட்சித் தருகிறார். எஸ். ஜே. சூர்யா கல்லூரி முதல்வர் கதாப்பாத்திரத்தில் புதுமையான தோற்றத்தில் நடிக்கிறார்.
அதே போல் பள்ளி மாணவியாகவும் கல்லூரி மாணவியாகவும் பிரியங்கா மோகன் க்யூட்டாக காட்சி தருகிறார். சிவகார்த்திகேயனின் முந்தைய திரைப்படமான “டாக்டர்” திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருந்தார். டாக்டர் படம் மாஸ் ஹிட் ஆனது. அதே போல் இருவரும் ஜோடியாக நடிக்கும் “டான்” திரைப்படத்திலும் இருவரின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைலரை பார்க்கும் போது கலகலப்பாகவும் ஜாலியாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. வில்லனாக வரும் எஸ். ஜே. சூர்யா மெர்சல், மாநாடு ஆகிய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படத்திலும் மாஸ் வில்லனாக காட்சி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைலரை பார்க்கும்போது ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடக்கும் போரட்டமே கதைக்களமாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. “வாத்தியாருங்க தான் எல்லா ஸ்டூடண்ட்ஸ்க்கும் பிரச்சனையா இருப்பாங்க, ஆனா ஒரு ஸ்டூடண்ட் எல்லா வாத்தியாருக்கும் பிரச்சனையா இருக்கான்”என்று டிரைலரில் வரும் வசனம் மாணவர்களுக்கு “டான்” ஆக சிவகார்த்திகேயன் திகழ்கிறார் என தெரிய வருகிறது.
பால சரவணன் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என தெரியவருகிறது. விலங்கு வெப் சீரீஸில் டெரர் ஆன ஆளாக கைதிகளை வெளுத்து வாங்கும் கதாப்பாத்திரமாக நடித்திருப்பார். இத்திரைப்படத்திலும் முக்கிய ரோலில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதா ரவி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ஷிவாங்கி, ராஜூ ஜெயமோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜொலிக்கிறார்கள் என தெரியவருகிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் யூட்யூப் தளத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
