CINEMA
“DON” திரைப்படத்தின் டிரைலர் என்னைக்கு தெரியுமா… ?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டான்” திரைப்படத்தின் டிரைலர் குறித்து புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
வருகிற மே 13 ஆம் தேதி சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த “டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேனும் இணைந்து தயாரித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போடுகிறது. வெளியிவந்த மூன்று பாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளது. அதிலும் “ஜலபுலஜங்க்” பாடல் இளைஞர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ஏற்கனவே “டாக்டர்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. இப்படமும் அதே போல் இந்த ஜோடியும் வொர்க் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் “குக் வித் கோமாளி” ஷிவாங்கி, முனிஸ் காந்த், காளி வெங்கட், பிக் பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் ஆகியோர் நடித்துள்ளனர். குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என தெரியவருகிறது.
இத்திரைப்படம் ஏற்கனவே மார்ச் 22 ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும் சில காரணங்களால் இத்திரைப்படம் மே மாதத்திற்கு தள்ளிபோனது. மேலும் “டான்” திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2.43 மணி நேரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. “படம் இவ்வளவு பெருசா?” என சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே சில ரசிகர்கள் ஆச்சரியத்தோடு இத்தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் Pre release event குறித்தான முக்கியமான அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை (மே 6) வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே போல் Pre release event-ம் நாளை நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
