CINEMA
“அஜித் படத்துல இருந்து சிவகார்த்திகேயன் சுட்டுட்டாரு…” ரசிகர்கள் ஆதங்கம்
அஜித் நடித்த “வாலி” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை போலவே “டான்” திரைப்படத்திலும் இடம்பெற்றிருக்கின்றது என ரசிகர்கள் அந்த காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே “டான்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக பிரியங்கா மோகனும் நடித்துள்ளனர். மேலும் எஸ். ஜே. சூர்யா இத்திரைப்படத்தில் வில்லன் போல் காட்சி தருகிறார்.
இந்நிலையில் அஜித் இரு வேடங்களில் நடித்து மாஸ் ஹிட் ஆன “வாலி”திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி போலவே “டான்” திரைப்படத்திலும் இடம் பெற்றிருப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘வாலி “ திரைப்படத்தில் ஹீரோ அஜித், வில்லன் அஜித் என இரண்டு பேர் இருப்பார்கள். அதில் சிம்ரன் வில்லன் அஜித்தை பற்றி தன் கணவனான ஹீரோ அஜித்திடம் குறை கூறும்போது வில்லன் அஜித் வில்லத்தனமாக சிரிப்பார். அப்போது சிம்ரன் “சிரிக்கிறான் பாருங்க, சிரிக்கிறான் பாருங்க” என கூறுவார். ஹீரோ அஜித் திரும்பி பார்க்கும் போது வில்லன் அஜித் சிரிப்பை நிறுத்தி சீரீயஸ் மோடுக்கு வந்துவிடுவார். அப்போது சிம்ரன் “மாத்திட்டான் மாத்திட்டான்” என கூறுவார்.
அதே போல் நேற்று வெளியான “டான்” டிரைலரிலும் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ராதாரவி எஸ். ஜே. சூர்யாவிடம் “வாட் இஸ் தி பிராப்ளம்?” என கேப்பார். அதற்கு சிவகார்த்திகேயன் வில்லத்தனமாக சிரிப்பார். உடனே எஸ். ஜே. சூர்யா ராதாரவியிடம் “சிரிக்கிறான் பாருங்க சிரிக்கிறான் பாருங்க” என கூறுவார். அப்போது சிவகார்த்திகேயன் சிரிப்பை நிறுத்தி சீரியஸ் மோடுக்கு வந்து விடுவார். எஸ். ஜே. சூர்யா “மாத்திட்டான், மாத்திட்டான்” என சிம்ரன் பேசிய அதே வசனத்தை பேசுவார்.
#SK recreated #Ajithkumar sir Magic infront of His Director @iam_SJSuryah
Sir @Siva_Kartikeyan#DonTrailer #Vaalee @iam_SJSuryah pic.twitter.com/YKlxV1dWLn— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) May 7, 2022
இந்த இரண்டு காட்சிகளும் இணைந்து இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன. “வாலி” திரைப்படத்தை இயக்கியது எஸ். ஜே. சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
