CINEMA
“டான்” திரைப்படத்தின் ஓரு நாள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ஒரு நாளில் எவ்வளவு கல்லா கட்டிருக்கு தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் நேற்று வெளியானது. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் வரும் கமர்சியல் அம்சங்கள் திரைப்படங்களில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக்கனி, ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எப்படி இருப்பாரோ அந்த யதார்த்தத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிளிர்கிறார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி எனர்ஜி லெவலில் மாஸ் காட்டுகிறார் என பரவலாக இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா மோகன் அழகு பதுமையாக வந்து கண்களுக்கு காட்சி தருகிறார். அதை தாண்டி நடிப்பில் அவ்வளவாக ஸ்கோர் செய்யவில்லை என விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்து வருகின்றன. பால சரவணன், ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ராதாரவி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாப்பாத்திரத்திற்கு நன்றாக நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் அல்டிமேட் பலம் எஸ். ஜே. சூர்யா தான். அவரின் நடிப்பை பற்றி நாம் கூற தேவையில்லை. வில்லனாக மாஸ் காட்டுகிறார். தனது நடிப்பால் சக நடிகர்கள் மீது கண்களை போக விடாமல் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் என பல சினிமா விமர்சகர்கள் எழுதி வருகின்றனர்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும் பாடல்கள் காட்சிப் படுத்தப்படிருந்த விதம் சுமாராகவே இருக்கிறது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை. ஒரு matured இயக்குனராக இப்படத்தை இயக்கியுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் “டான்” திரைப்படத்தின் ஒரு நாள் வசூல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளில் “டான்” திரைப்படம் ரூ.9 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.