CINEMA
“டான் படம் பார்த்து அழுகையா வருது”…பருத்திவீரன் செவ்வாழை நெகிழ்ச்சி வீடியோ
நடிகர் சரவணன் “டான்” திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து அழுதபடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் வரும் கமர்சியல் அம்சங்கள் திரைப்படங்களில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக்கனி, ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எப்படி இருப்பாரோ அந்த யதார்த்தத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிளிர்கிறார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி எனர்ஜி லெவலில் மாஸ் காட்டுகிறார் என பரவலாக இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா மோகன் அழகு பதுமையாக வந்து கண்களுக்கு காட்சி தருகிறார். அதை தாண்டி நடிப்பில் அவ்வளவாக ஸ்கோர் செய்யவில்லை என விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்து வருகின்றன. பால சரவணன், ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ராதாரவி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாப்பாத்திரத்திற்கு நன்றாக நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் அல்டிமேட் பலம் எஸ். ஜே. சூர்யா தான். அவரின் நடிப்பை பற்றி நாம் கூற தேவையில்லை. வில்லனாக மாஸ் காட்டுகிறார். தனது நடிப்பால் சக நடிகர்கள் மீது கண்களை போக விடாமல் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் என பல சினிமா விமர்சகர்கள் எழுதி வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சென்டிமென்ட் நிறைந்த காட்சியாக மனதை உருகச் செய்து அழுக வைத்து விடுவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சரவணன் “டான்” திரைப்படத்தை பார்த்துவிட்டு அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் “டான் திரைப்படம் எனது அப்பாவை ஞாபகப் படுத்திவிட்டது. படக்குழுவினருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Actor Saravanan after watching #DON #SamundibyDNCTheatres #KSCineplex #Harur #TNTbyDNCTheatres Book your tickets now pic.twitter.com/9dGwehtQxZ
— DNC Theatres (@dnctheatresoffl) May 15, 2022
