HOLLYWOOD
“Doctor Strange” எவ்வளவு கல்லா கட்டிருக்கு தெரியுமா?
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் இந்தியாவில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது தெரியுமா?
மார்வெல் தயாரிப்பில் சூப்பர் ஹீரோ வரிசையில் வெளிவந்த திரைப்படம் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம். ஏற்கனவே “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்” முதல் பாகம் வெளிவந்து சக்கை போடு போட்ட நிலையில் இத்திரைப்படம் மே 6 அன்று வெளிவந்தது.
மார்வெல் திரைப்பட வரலாற்றில் மாய வியூகங்கள் கொண்டு அமானுஷ்யங்களை சக்தியாக பயன்படுத்தும் ஒரே சூப்பர் ஹீரோ “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்” தான். பொதுவாக மார்வெல் திரைப்படங்களுக்கு DC திரைப்படங்களை விட இந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
ஏனென்றால் பெரும்பாலும் DC-ல் சூப்பர் மேன், பேட் மேனை தவிர்த்து இந்திய இளைஞர்கள் தங்களுடைய பால்ய வயதில் பெரும்பாலும் DC-ஐ சேர்ந்த வேறு எந்த சூப்பர் ஹீரோக்களையும் தங்களுடைய ஆதர்சமாக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் மார்வெல்-ஐ பொருத்தவரை ஸ்பைடர் மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, ஐயர்ன் மேன் என பலரும் ஆதர்ஷ சூப்பர் ஹீரோக்களாக விளங்கினார்கள்.
ஆகவே மார்வெல் திரைப்படங்களுக்கு இந்தியாவில் செமத்தியான மார்க்கெட் உண்டு. இந்நிலையில் கடந்த மே 6 ஆம் தேதி வெளிவந்த “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. எங்கு பார்த்தாலும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்:மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” வெளியான இரண்டு நாட்களில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் 50 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியான முதல் நாளிலேயே 30 கோடிகளை கடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 200 மில்லியன் டாலர்களுக்கு மேல் கல்லா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
