HOLLYWOOD
“மன்னிப்பு கேட்டது Disney!!”.. மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப்??
அவதூறு வழக்கில் ஜானி டெப் வெற்றிக்கு பிறகு அவரிடம் டிஸ்னி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம்பர் ஹெர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு வாசிங்க்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கை மூலமாக தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை உடல் ரீதியாக துன்பப்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகளை வைத்தார். அந்த கட்டுரை வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இது குறித்த அவதூறு வழக்கு சில வருடங்களாக விர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வழக்கில் ஆம்பேரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என விர்ஜினியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் ஜானியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டு சாட்டியதற்காக ஆம்பேருக்கு 15 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. இதில் ஜானிக்கு 10 மில்லியன் டாலர்களும் நீதிமன்றத்திற்கும் 5 மில்லியன் டாலர்களும் என கூறப்பட்டது. இவ்வழக்கில் ஜானி டெப் ஜெயித்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர் .
ஜானி டெப் மீது அவரது முன்னாள் மனைவி ஆம்பேர் ஹெர்ட் வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து டிஸ்னி நிறுவனம் Pirates of the Carribean, திரைப்படத்தில் இருந்து ஜானி டெப்பை நீக்கியது.
இந்நிலையில் தற்போது டிஸ்னி நிறுவனம் அவருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாம். அது மட்டும் அல்லாது டிஸ்னி நிறுவனம் மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியனில் ஜேக் ஸ்பேரோவாக நடிக்க 2355 கோடிக்கான Offer-ஐயும் அளித்துள்ளதாம்.
இது குறித்த செய்திகள் ஆங்கில செய்தி நிறுவனங்களில் பரவி வருகிறது. மீண்டும் பைரேட்ஸ் ஆஃப் தி கேரிபியன் திரைப்படத்தில் ஜானி டெப் ஜாக் ஸ்பேரோவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
