CINEMA
“இளையராஜா என்னைய உள்ளயே விடல”.. கதறி அழுத சீனு ராமசாமி
இயக்குனர் சீனு ராமசாமி “மாமனிதன்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளையராஜா தனக்கு செய்த காரியத்தை நினைத்து கதறி அழுதுள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய “மாமனிதன்” திரைப்படம் வருகிற 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
“மாமனிதன்” திரைப்படத்திற்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இத்திரைப்படத்தை YSR Productions சார்பாக யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
இந்நிலையில் “மாமனிதன்” திரைப்படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர் கே சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் சீனு ராமசாமி “என்னை இசைஞானி மாமனிதன் திரைப்படத்தின் ரீரெக்கார்டிங்க் அறைக்குள்ளேயே அனுமதிக்கவில்லை, ஏன் என்று எனக்கு இப்போது வரை புரியவில்லை” என கூறி கண்கலங்கினார்.
மேலும் அவர் பேசுகையில் “நான் இசைஞானியுடன் பல திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நான் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்று தான். ரீரெகர்டிங் ஒலிப்பதிவின் போது என்னை உள்ளே விடுங்கள் என்பது மட்டும் தான்” என வருத்தத்துடன் கூறினார்.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இருக்கும் பிரச்சனையில் தன்னை ஒதுக்கி விட்டதாக சீனு ராமசாமி கூறியுள்ளார். அதாவது “வைரமுத்து என்னுடைய பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதி உள்ளார். அதை யுவன் ஷங்கர் ராஜா தான் கம்போஸ் செய்தார். அவர் மட்டும் இளையரஜாவுடன் சேர்ந்து பணியாற்றலாம். நான் பணியாற்றக் கூடாதா?” என ஆதங்கத்தோடும் பேசியுள்ளார்.
சீனு ராமசாமி இதற்கு முன் “கூடல் நகர்”, “தென் மேற்கு பருவக்காற்று”, “நீர் பறவை”, “இடம் பொருள் ஏவல்”, “தர்ம துரை”,”கண்ணே கலைமானே” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். இதில் “தென் மேற்கு பருவக்காற்று” சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.